இத்தலம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அமைந்துள்ளது. கொழும்பு நகரத்திலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ளது. திசுமாராம் என்னும் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கதிர்காமம் ஒரு சிற்றூராகும். மாணிக்க கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் ஆலயம் உள்ளது.
கர்ப்பகிரகத்தின் முன் திரையிடப்பட்டு அத்திரையில் வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அந்த திரைச்சீலை இறைவனையே தரிசிக்க வேண்டும். பூஜைகளும் இந்தத் திரைச்சீலைக்குத்தான் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைத் தவிர மற்ற நாட்களில் பூஜை நடைபெறுகிறது. |